இரண்டு ஐயர்களால் புதுக்கோட்டை தொகுதி போனது தற்போது தமிழ்நாட்டுக்கு அந்த நிலை திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு

மணிசங்கர் அய்யர் கோபால்சாமி ஐயர் இவரும் சேர்ந்து ஒரு தொகுதியை இல்லாமல் செய்து விட்டனர் தற்பொழுது தமிழ்நாட்டிற்க்கு அந்த நிலை ஏற்படும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு.திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று ஒன்றிய அரசை கண்டித்து திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான நேரு பேசிய போது...
தமிழக அரசு மீது ஒன்றிய அரசு (பண) நிதி நெருக்கடியை கொடுக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான் 2200 கோடி ரூபாய் நிதியை விடுவிப்போம் என குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தை நிதி நெருக்கடியில் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நம்மிடமிருந்து வரியை வசூலித்து அதன் மூலம் கொடுக்க வேண்டிய நிதியை நமக்கு கொடுக்காமல்,மறுப்பதும்,குறைப்பதும் மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதும் நம் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
நமக்கு கடந்த ஆண்டு மூன்று புயல் வந்தது அதில் 36000 கோடி ரூபாய் நிதி பேரிடர் ரீதியாக கேட்டிருந்தோம் ஆனால் நமக்கு கொடுத்ததோ 200 கோடி ரூபாய் அதுவும் பேரிடர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது அதுவும் 600 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் அதையும் முறையாக தரவில்லை.மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டார்கள். வருகிற 22 ஆம் தேதி பிஜேபி முதல்வர்கள் ஆளாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை ஒன்றிணைத்து கூட்டம் போட்டு தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் விவாதிக்க உள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசு எதிர்க்கும் முதல்வராக தமிழ்நாடு முதல்வர் அனைத்தையும் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.நம் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல முதலமைச்சர் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராக திகழ்கிறார். கொள்கைக்காக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான முதலமைச்சராக முன்னெடுக்கிறார். அதற்காகத்தான் இந்த கண்டனம் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.உங்களுக்கெல்லாம் ஒன்றை குறிப்பிடுகிறேன் ஏற்கனவே திருச்சி பாராளுமன்ற தொகுதி,புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி என்று தனியாக இருந்தது.மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அந்த தொகுதி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. உடனடியாக திருச்சிக்கு வந்த மணிசங்கர் அய்யர் அப்போது இருந்த இந்திய தேர்தல் ஆணையர் கோபால் சாமியை சந்தித்து புதுக்கோட்டை தொகுதியை பொது தொகுதியாக மாற்றி திருச்சி பாராளுமன்ற தொகுதியுடன் இணைத்து விட்டார்.
ஏனென்றால் மணி ஷங்கரும் ஐயர் கோபால் சாமியும் ஐயர்.புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியே இல்லாமல்போய்விட்டது.ஏற்கனவே அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் தற்பொழுது ஒன்றிய அரசு மேலும் தமிழ்நாட்டிற்கு 31 தொகுதிகளை மறு சீரமைப்பில் குறைத்து விடுவார்கள். பீகார,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் உத்தர பிரதேசம் மாநிலங்களை வைத்து ஒன்றிய அரசு ஆட்சி அமைத்துவிடும்.அப்பொழுது தென் மாநிலங்கள் பற்றி அவர்களுக்கு அக்கரையும் இருக்காது அதனால் தமிழக முதல்வர் முழித்துக் கொண்டு தற்பொழுது போராடி வருகிறார்.மும்மொழிக் கொள்கையில் இந்தி வழக்கு மொழி.
நிதி, மொழி, இடம் என தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசிடம் போராடி வருகிறார். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் அமலாக்கத்துறை ரெய்டு திமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு மேலும் நெருக்கடியை கொடுக்கிறார்கள். ஒரு புறம் நிதி நெருக்கடி, மொழி திணிப்பு, இட நெருக்கடியென ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது நெருக்கடியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே உள்ளது என்றார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூம் மீட்டிங்கில் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும்.அதிமுகவினர் ஒழித்து கட்டி விடுவேன் என பேசி உள்ளார். எங்களுக்கு கட்சி பெரிதல்ல திருச்சி மக்களளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்.வளர்ச்சி தான் முக்கியம் அதை செயல்படுத்த இந்த அரசு உள்ளது.அதனால் தான் திருச்சியில் 100% வெற்றியை பெற்றுள்ளோம்.மணிப்பூரில் ஓராண்டு மேலாக வன்முறை கட்டவிழ்ந்துபட்டு பெண்களை ஆயிரம் ஆண்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள். அதற்கு பிரதமர் ஒரு முறை கூட சென்று பார்க்கவில்லை அவர்கள் நம் மாநிலத்தை பற்றி குறை கூறுகிறார்கள்.
திருச்சியில் 5000 கோடி வளர்ச்சி திட்டங்கள் நான்கு ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இது போன்று கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் இருக்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு அனைத்திற்கும் தலையாட்டி இஸ்லாமியர்கள் உரிமை சட்டங்களை பறித்தனர். அவர்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக தற்பொழுது குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision