கஞ்சா விற்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
கடந்த (31.01.2024)-ந் தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் தேவர் பூங்கா அருகில் இளைய சமூகத்தை சீரழிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை மஞ்சள் பையில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது மஞ்சள் துணி பையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்த எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பெருமாள் (எ) முகமது அப்பாஸ் (40), த.பெ.சுப்பிரமணி என்பவரிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.4,500/- ஆகியவற்றை கைப்பற்றி, எதிரி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி பெருமாள் (எ) முகமது அப்பாஸ் மீது கஞ்சா விற்பனை செய்ததாக தில்லைநகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், எடமலைப்பட்டிபுதூர், அமர்வு நீதிமன்றம், கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என விசாரணையில் தெரியவந்தது.
எனவே, எதிரி பெருமாள் (எ) முகமது அப்பாஸ் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision