திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவை துவக்கி வைத்த அமைச்சர்

திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவை  துவக்கி வைத்த அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி இவர் கோவை மாவட்டத்தில் ஊர்கேப்ஸ் என்ற Whatsapp மூலம் ஆட்டோ பதிவு செய்து ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் சேவை தொடர்ந்தது அந்த மாவட்டங்களில் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக இன்று ஊர்காப்ஸ் நிறுவனமானது தனது சேவையை திருச்சியில் துவங்கி உள்ளது. இச்சேவையை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை whatsapp எண் 8098480980 மூலமாக நாம் எளிதில் பயன்படுத்தலாம்.

கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தினாலும் திருச்சியில் அந்நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சொந்த வாகனத்தை இயக்கும் வகையில் செயல்பட உள்ளது.இந்த நிறுவனத்தில் பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநர்களை பயன்படுத்தி வருகின்றனர். பகுதி நேரமாக பணியில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநருக்கு அவர்கள் பெரும் வாடகை பணத்திலிருந்து 45 சதவீதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் முழு நேரமாக பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் அதிகப்படியாக இயக்கும் பொழுது அதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயக்கப்படும் வாகனங்கள் வாங்கும் கட்டணத்தை விட மின் ஆட்டோவின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது என நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். 2 கிலோமீட்டர் வரை ரூபாய் 49-ம் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 15ம் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

தற்போது இந்த நிறுவனம் திருச்சியில் 30 வாகனம் இயக்க தொடங்கியிருந்தாலும், திருச்சி முழுவதும் 400 மின் ஆட்டோ வாகனங்கள் இயக்கம் வகையில் செயல்பட திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் என பணி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்நிறுவத்துடன் இணைந்து செயல்பட 8428284289, 8428384288 ஆகிய எண்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision