14 வருடங்களாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமம் !!
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகேயுள்ள நந்தவனம் என்ற கிராமத்தில் 14 வருடங்களாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மின்சார வசதியும் இல்லாமல் இருட்டில் மூழ்கியிருக்கும் இந்த கிராமத்தின் நிலை குறித்து ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ் பேசுகையில்..... கடந்த 2009-2010 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை 67
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் காரணத்தினால் அப்பகுதியில் இருந்த புகழ்பெற்ற கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 17-A-2ல் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு மாற்று இடமாக கோவிலுக்கு சொந்தமான நந்தவன பகுதியில் குடியமர்த்தினர்.
அங்கு மாற்றப்பட்ட பின்பு அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி குடிமகனுக்கு அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பது சரத்து 21 இன் படி வாழ்வதற்கான உரிமையை மறுப்பதாகும். இது அடிப்படையை உரிமையினை பறிப்பதற்கு சமமாகும்.
இது சொந்த நிலத்திலேயே அகதியை போல் வாழ்வதை போன்றதாகும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கடந்த 2022 ஆம் ஆண்டு அடிமனை வாடகை கட்ட சொல்லி நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அங்கு குடியிருப்பவர்கள் அந்த வாடகையை கொடுக்க சென்ற போதும் அவர்கள் அதனை வாங்க மறுத்துவிட்டனர்.
தற்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு முதலமைச்சர் முகவரி துறைக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision