திருமாவளவன் தேசத் துரோகி -பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தாக்கு

திருமாவளவன் தேசத் துரோகி -பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தாக்கு

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர்

 உயிரிழந்தனர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருப்பு முருகானந்தம்,இன்று பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாட்டில் திருமாவளவன் சீமான் உள்ளிட்டோர் அந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பது போன்ற சில கருத்துக்களை

கூறுகின்றனர் இது கண்டிக்கத்தக்கது. திருமாவளவன் மீது நேர்மறையான எண்ணங்கள் இருந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திருமாவளவனின் கருத்து அவர் தேச துரோகி என்பதை தான் எடுத்துக்காட்டுகிறது இதுபோல் தேசத்திற்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision