அரசு கல்லூரிக்கு எதிரில் கழிவறை - இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்குகளுடன் பூங்கா அமைத்து வருகிறது. இதை தொடர்ந்து திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடைபாதையில் பூங்கா அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொது கழிப்பிடம் கட்டும் பணிகளையும் திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கழிப்பிடம் அமைப்பதற்கு சுற்றிலும் பல்வேறு இடங்கள் இருக்கும் பட்சத்தில் கழிவறை கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு எதிரே இடத்தை தேர்வு செய்தவன் காரணம் என்ன? தமிழக முழுவதும் பல்வேறு மாநகராட்சி கழிவறைகள் சுத்தம் செய்யாமல் அசுத்தமான முறையில் இருப்பதை பார்த்திருக்கிறோம்.
கல்லூரிக்கு எதிரில் இதுபோல கழிவறைகளை அமைப்பது கல்லூரியின் இயல்பு நிலையை பாதிக்கும் கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நோய் பரவக்கூடிய நிலை ஏற்படும். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் அமைக்க உள்ள கழிவறையை மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision