பாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி மாமியார் மருமகள்!

பாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி மாமியார் மருமகள்!

உணவே மருந்து என்ற காலம்மாறி மருந்தே உணவு என்று ஆகிவிட்டது. 20 வயதில் இக்கால இளைஞர்கள் பல நோயினால் உள்ளாகின்றனர். ஆனால் அக்காலத்தில் உள்ளவர்கள் திடகாத்திரமான உடம்புடன் அதிக வாழ்நாளுடன் வாழ்ந்தனர். அதற்கு ஒரே காரணம் உணவு மட்டும்தான். தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு இன்று வெளிநாடுகளில் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் தொங்குகின்றன.

நம் தமிழ் நாட்டின் உணவு வகைகளை நாம் அறிந்திருப்பதை விட மற்ற நாட்டினர் பெரும்பாலும் அறிந்து அவற்றை சுவைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய உணவை காக்கும் பொருட்டு திருச்சி பெண்களின் கைப்பக்குவத்தில் தயாராகும் பாரம்பரிய உணவு பற்றிய தொகுப்பு தான் இது!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே "தமிழூர்" என்ற பெயரில் பாரம்பரிய உணவு தயாரிப்பு வணிகம் தொடங்கி உள்ளதாக கேள்விப்பட்டு நமது குழுவுடன் அங்கு புறப்பட்டோம். அங்கு சென்று பார்த்ததில் நிறைய ஆச்சரியங்களும் இருந்தன பழமை மாறாத பாரம்பரியமிக்க சிறுதானிய கஞ்சி மாவு என பாரம்பரிய உணவுகளின் வகைகள் அங்கு இருந்தது.

Advertisement

இதுகுறித்து உணவு தயாரிப்பு வணிகம் துவங்கியுள்ள தீபா கபிலனை சந்தித்தோம். அப்போது அவர் கூறுகையில்... "தொழில் முனைவோராக வேண்டும் என யோசித்தபோது எங்கள் வீட்டின் பல உணவுகள் நினைவுக்கு வந்தது. என் பிள்ளைகளுக்கு என் மாமியார் செய்து கொடுக்கும் சத்துமாவு எங்கள் வீட்டில் அனைவருக்குமே பிடிக்கும். அதனையும் அவர் செய்யும் சத்துமாவு கஞ்சி மாவையும் வணிகமாக துவங்கியுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக வீட்டில் பாரம்பரியமாக செய்துவரும் தயாரிப்புகளை எனக்கு ஆசையுடன் சொல்லிக் கொடுத்துள்ளார். என் மாமியாரின் பக்குவத்திலேயே இந்த தயாரிப்புகளை செய்து வருகிறேன்" என்றார் தீபா

Advertisement

மேலும் அவர் "தனது கணவரின் அறிவுரை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை ஆகியவற்றை பெற்று தற்போது இரண்டு தயாரிப்புகளை கொண்டு இந்த வியாபாரத்தை துவங்கி உள்ளதாகவும் பாரம்பரிய உணவின் சுவையை உலகிற்கு எடுத்துச் செல்ல மக்களின் ஆதரவும் வேண்டும் என்கின்றார்.

படத்திலும், நிஜ வாழ்க்கையிலும் பார்க்கும் மாமியார் மருமகளை விட பாரம்பரிய உணவு செய்யும் இவர்கள், சற்று வித்தியாசமாக வணிகத்தை கையிலெடுத்து போட்டிபோட்டு நடத்திவருகின்றனர்.

தமிழூர் சத்துமாவு மற்றும் சிறுதானிய மாவு ஆகியவை எளிதான முறையில் கூரியர் மற்றும் தபால் மூலம் கிடைக்க 9791645781 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்களும் பயன் பெறலாம்.