திருச்சி மீன் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசல் - சிக்கி தவித்த பொதுமக்கள்

திருச்சி மீன் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசல் - சிக்கி தவித்த பொதுமக்கள்

திருச்சி உறையூர் - மருதாண்டாக் குறிச்சி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான காசிவிளங்கி பெயரில் நவீன மீன்சந்தை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க இச்சாலையில் பயணிக்க வேண்டிய உள்ளது. ஏற்கனவே ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள், பாதாள சாக்கடை பணிகளுக்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காகவும் சாலைகள் வெட்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை இச்சாலை வழியாகத்தான் திருச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரவேண்டும். திருச்சி மாநகர் பகுதியில் உள்ளவர்கள் மீன், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் ஒரு மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டம் என்பதாலும், இந்த வாரம் பொதுமக்கள் அதிகமானோர் மீன் வாங்க குவிந்து உள்ளனர். கடுமையான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சாலையில் நடக்க செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வானங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இச்சாலைகளில் வெட்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலைகளை சரி செய்து போக்குவரத்து நெரிசலிருந்து இருந்து பொதுமக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானனோர் தற்பொழுது சாலையில் கடுமையான குளிரில் ஒரு மணி நேரமாக தங்களது வாகனங்களுடன்  நின்று கொண்டிருக்கும் காட்சிகளை காணமுடிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn