திருச்சியில் ரயில் விபத்து? - பதறிய பொதுமக்கள்

திருச்சியில் ரயில் விபத்து? - பதறிய பொதுமக்கள்

திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இயற்கை பேரிடா் மற்றும் ரயில் விபத்துகளின் போது பயணிகளை மீட்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுகிறது.

இதற்கு தீா்வு காணும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை மற்றும் பெருநகரப் பேரிடா் மீட்புப் படையை சோ்ந்த 400 போ் கலந்து கொண்டனர். காலை 9 மணியிலிருந்து தொடா்ந்து மதியம் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சிக்காக ரயில் விபத்து நடைபெற்றது.

விபத்து ஏற்பட்டது போன்று பெட்டிகள் அமைக்கப்பட்டன. பின்னா் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மீட்பு பணியாளா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பயணிகளை மீட்கும் அவசர கருவிகளுடன் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்று ஒத்திகை மேற்கொண்டனா். இதன் மூலம் விபத்து காலங்களில் குறைந்த நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

தொடா்ந்து விபத்தின்போது பணியாளா்கள் மற்றும் அவசர கால பொருள்களை திரட்டுதல், விளக்குகள் அமைத்தல், தடம் புரண்ட பெட்டியில் இருந்து பயணிகளை மீட்டல், அவசர கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், காயமடைந்தவா்களுக்கு முதலுதவி வழங்குதல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து அனைத்துதுறை பணியாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ் அன்பழகன், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி, தேசிய பேரிடா் மேலாண்மை மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள், தீயணைப்பு அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுநர்கள் ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். இந்த ரயில் விபத்து ஒத்திகை பயிற்சியை தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது இதை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி இதை கண்ட வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு தகவல் பரப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி குட்செட் பகுதியில் ரயில் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வேகமாக பரவி வருகிறது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision