மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் விடுதி மாணவர்களுக்கு தரமான அரிசி வழங்க திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் விடுதி மாணவர்களுக்கு  தரமான அரிசி வழங்க திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள்

 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மாநில மாவட்ட நிர்வாகிகள் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட 12 தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நிறுவன தலைவர் சகாதேவன் விடுதி நிர்வாகத்திற்கு முன்பணம் வழங்க வேண்டும் .30 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கிய சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை நேரடியாக காப்பாளர் மூலமாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காப்பாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் அதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

பள்ளி விடுதி மாணவர்களுக்கு உணவு செலவின தொகையை ஆயிரமும், மாணவர் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாதம் 1100 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனை கல்லூரி மாணவர்களுக்கு உணவு கட்டணமாக 1500 பள்ளி மாணவர்களுக்கு 1300 வழங்கவும் இச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

விடுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு  ரேஷன் அரிசி வழங்காமல் தரமான அரிசி உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில செயற்குழு கூட்டம் வாயிலாக தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn