தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட சமூக ஆர்வலர்கள் துண்டறிக்கை பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட சமூக ஆர்வலர்கள் துண்டறிக்கை பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு

திருச்சியில் தீபாவளி திருநாளை பாதுகாப்பாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மன்னார்புரம் பேருந்து நிலையம் சோனா மீனா திரையரங்கம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில்

பேருந்து பயணிகள் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோரிடம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எந்த பகுதிகளில் வெடிக்க வேண்டும் வெடி வெடிக்கும் போது நாம் எப்படி கவனமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள வெடிகளை வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.

குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ன தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக யாரை தொடர்பு கொள்ள வேண்டும் முதலுதவிக்கு யாரை அனுக வேண்டும் போன்ற பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஆர் கோவிந்தராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவரும், மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான சிவசங்கர் சேகரன்,

அறிஞர் அண்ணா சிட்டிசன் ரைட்ஸ் லீகல் புரொடக்சன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை சமூக ஆர்வலரும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாளருமான சீனிவாச பிரசாத் சமூக ஆர்வலர் கோவிந்தசாமி, மாற்றம் அமைப்பின் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பேருந்து பயணிகள் மாணவ மாணவிகள் ஆகியோரிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision