தேசிய அடையாள அட்டை வழங்கியதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் முதல் இடம்

தேசிய அடையாள அட்டை வழங்கியதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் முதல் இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) வழங்கிட இணைய வழி மருத்துவ சான்று பதிவேற்றம் சிறப்பு முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இந்த முகாம் குறித்து திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் இம்மாதம் 4-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதுவரை 20 முகாம்கள் முடிவடைந்துள்ளன.

இதில் 3,000 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைப்பதற்காக அந்தந்த மருத்துவமனை வட்டாரங்களிலேயே மருத்துவ குழுக்களை அனுப்பி அங்கேயே அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதுவரை மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெறாமல் இருந்தால் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அவர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் மருத்துவம் பார்த்த சான்றிதழ்கள் கொடுத்தால் அந்த இடத்திலேயே உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே அதிகமான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்து அடையாள அட்டை கொடுக்கப்பட்டு திருச்சி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. எனவே தமிழக அரசால் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 49,000 மாற்று திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision