அரசு மருத்துவமனைக்கு 3.30 லட்சம் மதிப்பிலான உணவு தள்ளுவண்டியை வழங்கிய திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை
கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் கூட்டு நடவடிக்கை குழு இணைந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் உதவும் விதமாக முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் தொடர்ந்து சேவைகளை செய்து வருகின்றன.
சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் துப்பாக்கி தொழிற்சாலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 7.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உதவி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதாவை நேரில் சந்தித்து துப்பாக்கி தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கே.கார்த்திகேஷ் 3.30 லட்சம் மதிப்பிலான 7 அதி நவீன உணவு தள்ளுவண்டியை வழங்கியுள்ளார்.
உதவிகளைப் பெற்றுக் கொண்ட பின், அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உதவி வரும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW