அர்ஜென்டினா உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பதக்க வேட்டையாட உதவிகரம் வேண்டும் திருச்சி வீரர்கள்

அர்ஜென்டினா உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பதக்க வேட்டையாட உதவிகரம் வேண்டும்   திருச்சி வீரர்கள்

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து 10 பேர் ரோலர் ஸ்கேட்டிங்  பிரிவுகளில் உலகக் கோப்பை விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பஸ்லூல் கரீம் தன்னிடம் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் சுமார் 900க்கு மேற்பட்டோர் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்து வருகிறார்.

திருச்சி வடுகப்பட்டி பகுதியில் இதற்காக தனது சொந்த செலவில் பயிற்சி தளத்தை அமைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு தனது ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி துவங்கியவர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றார. அதன் பிறகு உலக அளவில் ரோலார் போட்டியில் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு நிலையில் போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். தான் போக முடியாத இடத்தை தன் மாணவர்களை போக வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது கடுமையான பயிற்சி கொடுத்து உருவாக்கினார்.

ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் 18 வகை விளையாட்டுகள் உள்ளது. (Speed Skating, Roller Hockey, Inline Hockey, Artistic Skating, Inline Freestyle, Inline Alpine, Inline Downhill, Roller Derby, Roller Freestyle, Skateboarding, Roller Scooter) அதில் தற்பொழுது  தேர்வாகி உள்ளவர்கள் பத்து பேர் ஐந்துக்கு மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் திருச்சியில் தான் 10 பேர் ரோலர் ஸ்கேட்டிங்க்கு உலக கோப்பை விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்று பெருமைப்பட குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் கரீம்.

இந்த விளையாட்டு இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் உள்ளிட்ட படிப்புகளுக்கு விளையாட்டு பிரிவிற்கான முன்னுரிமையில் மாணவர்கள் சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டுக்கான உரிய அங்கீகாரம் மற்றும் அரசு பணியில் வேலையை தமிழக அரசு செய்து கொடுத்தால் விளையாட்டு வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் நாட்டிற்கான பெருமையும் தேடித்தந்து தங்கங்களை குவிக்க ஏராளமான தங்க வீரர்கள் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

ஸ்கேட்டிங்க்கான முறையான ஆணையம் அமைத்து மாவட்டம் முழுவதும் அதற்கான பயிற்சி தளங்களையும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசுக்கு வைத்துள்ளார். தற்பொழுது தேர்வாகியுள்ள 10 பேரில் ஐந்து பெண்களும் ஐந்து ஆண்களும் உள்ளனர்.இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் அர்ஜென்டினாவில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க 75 பேர் தேர்வாகியுள்ள நிலையில் இந்த 18 பிரிவுகளை தமிழகத்தில் திருச்சியில் 10 பேரும் மதுரையில் இருவரும் சென்று விளையாட உள்ளனர்.

திருச்சி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்  மாணவி ஐஸ்வர்யா தாய் தந்தையின் குறைந்த வருமானத்தில் அவர்களின் இவ்விளையாட்டு என்ற வேண்டாம் பேச்சையும் தாண்டி பயிற்சியில் ஒரே வருடம் மட்டுமே ஈடுபட்டு தன் முயற்சி மூலம் வெற்றி படிகளாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள இவருக்கும் உதவி வேண்டும் என்ற நிலையில் உள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டை அங்கீகரித்து அதிக வீரர்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடும் காவியா. தனக்கு தந்தை இல்லாத நிலையிலும் விபத்தில் கையில் காயம் ஏற்பட்ட தாயின் குறைந்த வருமானத்தில் படித்து வருவதால் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் அவருக்கு தேவையான உபகரணங்களை கூட வாங்க முடியாத நிலையில் தவித்தார். தற்பொழுது இவர் அர்ஜென்டினாவுக்கு செல்ல 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக நல் உள்ளங்களை நாடி வருகிறார். இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு  உதவி செய்தால் நம் தமிழ்நாட்டிற்காக விளையாடும் வீராங்கனைகளை ஊக்குவித்து பதக்க வேட்டையாட உறுதுணையாக இருக்கும் என பயிற்சியாளர் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த 10 பேர்களை அனுப்புவதற்கு ஒவ்வொருவருக்கும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தேவைப்படக்கூடிய நிலையில் வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர் பஸ்லூல் கரீம் தனது சொந்த காரின் RC புத்தகத்தை அடமானம் வைத்து அதில் வரும் தொகையை இவர்களுக்கு கொடுத்து உதவ ஏற்பாடு செய்துள்ளார். ஆனாலும் கூடுதலாக பணம் தேலை உள்ள நிலையிலும் அடுத்த மாதம் வீரர்கள் அனுப்பி பதக்கம் வெல்வது மட்டுமே இவரது எண்ணமாக உள்ளது. தனது மாணவர்களை எப்படியாவது அர்ஜென்டினாவிற்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்துகிறார் கரீம்.

தமிழக அரசு தொடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் தேர்வாகும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் .இதுபோன்ற உலகளாவிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான உதவிகளையும் செய்ய வேண்டும் என இவ்வீரர்கள் குறிப்பிடுகின்றனர். குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை இவ்விளையாட்டு உபகரணங்கள் என்பது பயிற்சிக்காக இவர்கள் செலவிடும் தொகையாக உள்ளது. அர்ஜென்டினாவில் சென்று தமிழகத்தின் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவிற்கான பதக்கபட்டியலில் முன்னிலையில் கொண்டு வருவார்கள் என்பது இவ்வீரர்கள் துடிப்பான ஆக்ரோஷமான பயிற்சியிலேயே தெரிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO