திருச்சியில் வாய்தகராறில் ஈடுபட்டவர்களை மரக்கன்று நட வைத்த காவல் ஆணையர்

திருச்சியில் வாய்தகராறில் ஈடுபட்டவர்களை மரக்கன்று நட வைத்த காவல் ஆணையர்

திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது வீட்டில் வடிவேலு,கருனைகிரி இருவரும் வீட்டில் குடியிருப்பவர்கள். வீட்டு உரிமையாளருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவசர தொலைபேசியில் 100க்கு வந்த அழைப்பின் பேரில் கண்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆய்வாளர் அகிலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார் .

இருவரும் மாறி மாறி புகார்களைக் கூறி வந்தனர். சாக்கடை தண்ணீர் வழிந்து ஓடுகிறது இப்படி சில புகார்களை தெரிவித்தபோது தற்பொழுது ஆக்சிஜன் மிக முக்கியமாக உள்ள காலகட்டத்தில் மரக்கன்றுகளை நட வேண்டியதுதானே என்று அவர்களுக்கு உதவி ஆய்வாளர் அறிவுரை கூறினார். உடனடியாக செந்தில்குமாரும், வடிவேலு,கருனைகிரி மூவரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலும் அவர்களது இல்லம் இருக்கும் பகுதியிலும் வேப்ப மரக்கன்றுகளைள நட்டனர். கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் அகிலா இருவரையும் சமாதானப்படுத்தி நட்புடன் இருக்க அறிவுரை வழங்கினார்.

இரு தரப்பினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இருத்தரப்பினரையும் கண்டோன்மென்ட் காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இருத்தரப்பினரும் ஒருமித்தமாக சமாதானமாக செல்வதாகவும்  வழக்கு எதுவும் தேவையில்லை என எழுத்துபூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

 திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களின் உத்தரவுபடி இருத்தரப்பினரும் ஆளுக்கொரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதால் பேரில்  05.07.2021-ஆம் தேதி இருத்தரப்பினரும் ஆஜராகி மரக்கன்று நட்டனர் என காவல் உதவி ஆய்வாளர் அகிலா குறிப்பிட்டார்.

மழைக்காலம் வர இருப்பதால் மரக்கன்றுகள் நட்டு இயற்கைக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டோன்மென்ட் காவல் நிலைய காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAm