திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து (08.07.2024) முதல் (28.07.2024) வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். (03.07.2004) அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் (03.01.2008) அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையவழித்தேர்வு (18.10.2024) முதல் நடைபெறவுள்ளது.
மேலும் கல்வித்தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் /ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் பட்டயப்படிப்பில் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி) மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது மூன்று முறைகளாக கொண்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision