தாய்ப்பாலின் அவசியத்தை நகர்புற பெண்கள் உணரவில்லை - திருச்சி அரசு மருத்துவமனை டீன் பேட்டி
தாய்பாலின் முக்கியத்துவம், தனித்தன்மை குறித்து தாய்மார்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய குழந்தை மருத்துவசங்கம் சார்பில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தாய்ப்பால் வார விழாவையொட்டி திருச்சி அண்ணல்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பாலை கொடுப்போம் தலைமுறையைக் காப்போம் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்போம் மற்றும் தாப்பாலின் அவசியம் குறித்த உறுதிமொழியினையும் மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு, தாய் நலம் புட்டிப்பாலின் கேடுகள் உள்ளிட்டவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் பயிற்சி செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசு மருத்துவமனையிலிருந்து பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியினை மருத்துவமனை முதல்வர் நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... குழந்தைகள் பாதுகாப்புக்கு தாய்ப்பால் அவசியம் என்றும் தங்களின் நலனில் அக்கறைகாட்ட தாய்ப்பால் வழங்க வேண்டியது அவசியம், அதேநேரம் திருச்சியில் நகர்புறங்களைவிட கிராமப்புறங்களிலேயே பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை வாடிக்கையாக்கியுள்ளனர்.
நகர்புறங்களில் தாய்ப்பாலின் அவசியத்தை பெண்கள் உணரவில்லை, தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராமல் தப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO