அவசர அவசரமாக கொரோனா வார்டு! அச்சத்தில் ஸ்ரீரங்கம் மக்கள்!!

அவசர அவசரமாக கொரோனா வார்டு! அச்சத்தில் ஸ்ரீரங்கம் மக்கள்!!

திருச்சியில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் அதிகமான பேர் கொரோனா நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதுமே மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் கிழக்கு ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் பிரசவ மருத்துவமனையை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொரானா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர்.

Advertisement

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இப்பகுதி மக்கள் கொரோனா மையம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்..
இந்த மருத்துவமனைக்கு எதன் அடிப்படையில் கொரனா தொற்று நோய் சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே எந்த இடைவெளியும் இல்லாமல் கொரோனா மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஜன்னலை திறந்தால் கூட எதிர் எதிரே குடியிருப்புகள் அமைந்துள்ளது. எந்தவித அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்றும், இந்த மருத்துவமனை இவ்வளவு நெருக்காமான காற்றோட்டம் இல்லாமல் வீடுகளுக்கு நடுவே தொடங்கினால் சமூக பரவு தொற்றாக மாறுவதாகவும், இதனால் சொந்த விடுகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படுகிறது என்று கூறி வருகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொரோனா அதிகமாக பரவி வரும் ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா? என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.