ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சியில் 5000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சம் வேண்டாம் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் – ஆட்சியர் பேட்டி!

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சியில் 5000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சம் வேண்டாம் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் – ஆட்சியர் பேட்டி!

திருச்சி மாநகரில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் வருவாய்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து 65 வார்டுகளுக்கும் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைப்பெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 என்கிற அளவில் இருக்கும்.கொரோனாவை தற்போது ஒழிக்க முடியாது.அதனோடு இணைந்து வாழ வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வருவாய் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

Advertisement

கொரோனா காரணமாக யாரும் அச்சப்பட தேவையில்லை.உரிய வழிமுறைகள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க உள்ளோம்.

திருச்சியில் தற்போது ஒரு நாளைக்கு 1100 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 3.5 சதவீதம் வரை தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதை 3 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு .
வருகிறது.

கொரோனா உயிரிழப்புக்களை மறைக்க மாவட்ட நிர்வாகம் விரும்பவில்லை.திருச்சி மாவட்டத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் கொரோனா முடிவுகளை தவறாக வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.