ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடி 28 அம்மாமண்டபத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!

ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடி 28 அம்மாமண்டபத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!

ஆடி மாதம் என்றாலே களைகட்டி காணப்படும் நகரம் திருச்சி. சோழர் காலம் தொட்டு ஆடி மாதத்திற்கு காவிரியால் தனிச்சிறப்பு உண்டு.ஆனால் இந்தக் கொரோனா அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் தர்ப்பணம் கொடுக்க அனுமதி கிடையாது. வாசலிலேயே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்மாமண்டபம் மாம்பழச்சாலை வழியே நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை .குறிப்பாக காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்க்கும் ,வருவதற்க்கும் தடை விதிக்கபட்டுள்ளது என ஒலிப் பெருக்கி மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.இங்கு வரும் பொதுமக்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Advertisement

ஏற்கனவே அம்மா மண்டபத்திற்கு மக்கள் யாரும் வரக்கூடாது என திருச்சி மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரிக் கரையோரங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் யாரும் கூடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஆடி18, ஆடி 28 ஆகிய தேதிகளும் பொதுமக்களுக்கும் புரோகிதர்களுக்கு அனுமதி கிடையாது என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement