சுங்கவரி கட்டணம் பல மடங்கு உயர்ந்ததை திரும்ப பெற வேண்டும் - பேருந்துகளுடன் முற்றுகையிட்டு போராட்டம்

சுங்கவரி கட்டணம் பல மடங்கு உயர்ந்ததை திரும்ப பெற வேண்டும் - பேருந்துகளுடன் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகளுக்கு வசூலிக்கப்படும் மாதாந்திர சுங்க கட்டண ம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை திரும்ப பெற

 வேண்டும் என்பதை வலியுறுத்தி தனியார் புறநகர் (மப்சல் )பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீரென சுங்கச்சாவடியை பேருந்துகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், , பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் சென்று வருகிறது.இந்த நிலையில் அந்த பேருந்துகள் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி வாழவந்தான் கோட்டை உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

 அப்படி கடந்து செல்லும் தனியார் புறநகர் பேருந்துகளுக்கு சுங்கச்சாவடியில் மாதம் தோறும் ரூ 8405 சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்து உள்ளது.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிரடியாக சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலையை பராமரித்து வரும் நிறுவனம் அறிவித்தது.

அதுவும் முன்பு நாள் கணக்கில் இருந்ததை தற்பொழுது நடை கணக்கில்அதாவது ஒரு நாளைக்கு 8 நடை வீதம் ஒரு மாதத்திற்கு பஸ் சென்று வருவதற்கு ரூ.37,200 யும், 10 நடைக்கு ரூ.46,500, 12 நடைக்கு ரூ.55,800 என வசூலிக்கிறார்கள்.ஏற்கனவேடிரைவர், கண்டக்டர், கிளீனர் சம்பளம், படி, டீசல், ஆயில், பஸ் ஸ்டான்டு கட்டணங்கள், மேலும் ஆண்டு இன்சூரன்ஸ்,டயர் தேய்மானம், பஸ் பராமரிப்பு, ஆகிய செலவுகள் போக எங்களுக்கு கிடைக்கும் தொகை மிகவும் குறைவானதாகவும், நஷ்டத்திலும் இயக்க வேண்டி இருக்கிறது.

கடந்த 8 ஆண்டுக்கு முன்பு தான் பஸ் கட்டணம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு டீசல் விலை ஏற்றம், மற்ற பேருந்து தொடர்பான அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.இதுவே கீரனூர், விராலிமலை, கோவில்வெண்ணி, மணப்பாறை, கந்தர்வகோட்டை ஆகிய சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் மட்டும் தான் கட்டண உயர்வு செய்கிறார்கள்.ஆனால் இந்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் பல மடங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியே தனியார் பஸ் டிரைவர் நடத்துனர் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இது சம்பந்தமாக துவாக்குடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

 இந்த நிலையில் மீண்டும் இன்று காலை தனியார் பேருந்துகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் உள்ள சாவடியை முற்றுகையிட்டு பிற வாகனங்கள் சென்றுவர முடியாத வண்ணம் நிறுத்தி தனியார் பஸ்களை நிறுத்தி ஓட்டுநர் நடத்துனர் மற்றும் உரிமையாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்று சம்பவப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்தினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision