வைகை அதிவிரைவு ரயில் 16-ம் தேதி முதல் திருவரங்கத்தில் 2 மார்க்கத்தில் நிற்கும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

வைகை அதிவிரைவு ரயில் 16-ம் தேதி முதல் திருவரங்கத்தில் 2 மார்க்கத்தில் நிற்கும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

வைகை விரைவு ரயில் வண்டி இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு. இதனை அமல்படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற (16.09.23) ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சோதனை நடைபெறும். அதன் பின் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை விரைவு ரயில் வண்டி நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும்.

சோதனை நிறுத்தம் நடைபெறுவதை அடுத்து 80 சதவீதம் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு வண்டி நின்று செல்லக்கூடியது உறுதியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த தெற்கு ரயில்வே தீவிரம். வைகை ரயிலின் விவரம் :- வண்டி எண் :- 12635 சென்னை எழும்புரில் இருந்து பகல் 01:50 PM மணிக்கு புறப்பட்டு மாலை 06:05 PM மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும். 

(மறுமார்கமாக) {Return}

வண்டி எண் :- 12636

மதுரையில் இருந்து காலை 07:00 AM மணிக்கு புறப்பட்டு காலை 09:36 AM ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும்.

இதேபோல் மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மயிலாடுதுறை மைசூர் விரைவு விரைவில் புகழூர் ரயில் நிலையத்திலும், மன்னார்குடி சென்னை எக்மோர் ரயில் கொரடாச்சேரியில் நிற்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் வருகிற (16.9.2023) முதல் மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision