தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரம்

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என நேற்று (மார்ச் 16) இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20ஆம் தேதி தொடங்கும் நிலையில், 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளாகும். மேலும், 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 30ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு வழங்கும் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை வாகனங்கள் மற்றும் நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் நேற்று துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிமுகமானதை தொடர்ந்து வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற கூறி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision