திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 13 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்கவும் பள்ளிகள்
மற்றும் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை
எடுத்தும், கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள்
மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும் மாநகரில் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை
செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள்
வழங்கியுள்ளார்.
கடந்த 2020-ம் வருடம் திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 137 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வருடம் திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது இதுநாள் வரை 186 வழக்குகளில் 260 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 13 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 5500 மாணவர்களுக்கு காவல் ஆளிநர்கள் மூலம் போதை பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தகவலாலிகள், காவல் ஆளிநர்கள் சேர்ந்த வாட்ஸ் ஆப் குழு அமைத்து கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn