மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பப்ளிக்காக திருச்சியில் மதுவிற்பனை

மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பப்ளிக்காக திருச்சியில் மதுவிற்பனை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மது விற்பனை மறைமுகமாக நடைபெற்று வந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மதுபான கடை முன்பு அரசு உத்தரவை மீறி இன்று காலை முதல் மது விற்பனை செய்து வந்துள்ளனர்.

மது வாங்குவதற்காக மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மது விற்பனை செய்த கண்ணன் உள்ளிட்ட இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டையில் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி காந்தி ஜெயந்தி நாளன்று பட்டப் பகலில் மதுவிற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு மது கடைக்கு விடுமுறை அளித்த நாள் அன்று 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision