திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் பெருகம்பி எதுமலை வாலையூர் பாளையூர் சிறுகனூர் பொதுமக்கள் இணைந்து திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரகம்பியிலிருந்து எதுமலை வரை வனத்துறை சாலைகள் அமைத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்கு, காட்டுப்பன்றி, மான், மயில் போன்றவற்றை வனத்துறையினர் கட்டுப்படுத்த கோரியும், வன விலங்குகள் ஊர் பகுதியில் புகா வண்ணம் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும், காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் விலங்குகள் சாப்பிடும் வகையில் மரக்கன்று நட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட வன அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO