வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு 42 பயிற்சி வன உதவி பாதுகாவலர்கள் வருகை
திருச்சி வன மண்டலம், திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்காச்சரகம், ஸ்ரீரங்கம் வட்டம் மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு கோவை CASFOS PRINCIPAL & கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் 42 பயிற்சி உதவி வனப் பாதுகாவலர்கள் வருகை புரிந்தனர்.
அவர்களுக்கு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா அவர்களின் வழிகாட்டுதலின்படி, உதவி வன பாதுகாவலர் R.சரவணக்குமார் அவர்களின் தலைமையில், வண்ணத்துப்பூச்சி பூங்காவின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
வண்ணத்துப்பூச்சி பூங்கா கொள்ளிடம் ஆற்று கரையோரம் சீதோசன நிலைக்கு ஏற்ப அமையப்பெற்றது . இங்கு வண்ணத்துப்பூச்சியின் உணவு, இனப்பெருக்கம், புகலிடம், Host & Nector Plants ,Indoor &Outdoor Conservatory, Humidifier, Amphi theatre, மற்றும் வண்ணத்துப்பூச்சி இன்றியமையாமை குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது . பின்பு எம். ஆர். பாளையம் காப்பு காட்டில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு செல்லப்பட்டது. இங்கு யானைகளின் பராமரிப்பு முறை, யானைகளின் தினசரி நடவடிக்கைகள், மற்றும் யானைகளின் உடல்நிலை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது .
இந்த முகாம் வளர்ப்பு யானைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட முதல் முகாம். இங்கு உரிமம் இல்லாமலும் உரிய அனுமதி இன்றியும் வளர்ப்பு யானைகளின் விதிகளுக்கு புறமாகவும், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட யானைகளை மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க பறிமுதல் செய்து வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு யானைகளுக்கு காலை மற்றும் மாலை நடை பயிற்சி, உணவுகள் ,பழங்கள், பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றது. யானைகளின் உடல் வெப்பத்தினை குறைப்பதற்கு ஏதுவாக குளியல் நீர் தெளிப்பான் ,Fogger, சேற்று குளியல், பாத குளியல், குளியல் நீர் தொட்டி குறித்து விளக்கப்பட்டது . அவர்களுடன் வனசரக அலுவலர் வி.பி. சுப்பிரமணியம் மற்றும் வனவர்கள், வன பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision