எள் பயிர்களில் தண்ணீர் தேக்கம் - விவசாயிகள் கவலை.
தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில், கல்லணை, நடுகரை பகுதி, ஊர்கலான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர் சீலி, பனையபுரம், திருவளர்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை பயிர்களான உளுந்து எண்ணெய் வித்து பயிரான எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பெய்த கன மழை காரணமாக சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை பயிர்களில் ஒன்றான எள் பயிரில் தண்ணீர் நிற்கிறது. கோடை பயிருக்கு தண்ணீர் என்பது பகையாகும். இந்நிலையில் தண்ணீர் தேங்கி நின்றால் எள் பயிர் அழிந்து விடும். இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே விவசாயப் பயிர்கள் பெரும் அளவு கை கொடுக்காத நிலையில் கோடை பயிரான எள் பயிரை சாகுபடி செய்துள்ள நிலையில் அதாவது கை கொடுக்குமா என்ற எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இப்படி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision