We are your Voice மற்றும் DDU-GKY, புனித ஜோசப் கல்லூரி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்:
புனித ஜோசப் கல்லூரி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்:
*இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல…**சமுகத்தை மாற்றும் திறனாளிகள்…**தன்னிடம் உள்ள குறையை பார்ப்பவன் உலகை வெறுக்கிறான்…* *அதை உடைத்து எழுபனே உலகை திரும்பி பார்க்க வைக்கிறான்.*
இளம் வயதில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் தன்னுடைய பேச்சு பார்வை அனைத்தையும் இழந்து தன்னுடைய விடாமுயற்சியால் சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றியவர். பல புத்தகங்களை எழுதியுள்ள *ஹெலென் கெல்லர்* ஒரு மாற்றுத்திறனாளி தான்.பல தமிழ் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். ஒரு விபத்தில் தன்னுடைய காலை இழந்த போதிலும் பரதநாட்டியத்தில் சோதனைகள் எல்லாம் கடந்து வெற்றி வாகை சூடிய *சுதா சந்திரன்* மாற்றுத்திறனாளி தான்.21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப்பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. உலகையே வியந்து பார்க்க வைத்த *ஸ்டீபன் ஹாகிங்*மாற்றுத்திறனாளி தான்.
இவ்வாறாக நீங்களும் இந்த சமுகத்தை மாற்றியமைக்க ஓர் அரிய வாய்ப்பு…வருகின்ற *நவம்பர் 17 தேதி திருச்சி தூய வளனார் கல்லூரி சத்திரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்* நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற எந்த கட்டணமும் கிடையாது.நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு. சுயதொழில் மற்றும் கடன் உதவிகள் சார்ந்த விளக்கங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், அவர்களது சேவைகள் பற்றியும் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு நமது திருச்சியில்.
இதில் 10, 12, தொழிற் படிப்பு (ITI), பட்டப்படிப்பு (Degree) படித்த கை / கால் பாதிக்கப்பட்ட,காது கேட்காத / வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம்.முன்பதிவு அவசியம்.இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கீழ்காணும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்*www.weareyourvoice.org*தொடர்புக்கு : *7557550888* & *7557550999*ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.