இரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? - விளக்கம்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொற்று எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கையாக மக்களுக்கு முகக்கவசம்அணிவது , சமூக இடைவெளியை பின்பற்றுவது என அரசு பல்வேறு வழிமுறைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கொரானா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரட்டை மாஸ்க் போட வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுனர்.
இரட்டை மாஸ்க் அணியும் பொழுது பின்பற்ற வேண்டியவை என்ற சில விதிமுறைகளையும் கூறியுள்ளனர்.
->சர்ஜிக்கல் மாஸ்க்கை முதலில் போட்டு அதற்கு மேல் துணி மாஸ்க்கை போட வேண்டும்.
-> சர்ஜிக்கல் மாஸ்க்கில் உள்ள கம்பியை மூக்கு பகுதியில் வைத்து அழுத்தி இறுக்கமாக பொருத்து மாறு செய்ய வேண்டும்.
-> 2 மாஸ்க் போட்ட பிறகு இயல்பாக சுவாசிக்க முடிகிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
-> அதேபோன்று இரண்டு சர்ஜிக்கல் மாஸ்க் அல்லது இரண்டு துணி மாஸ்க் அணிய கூடாது .ஒரு சர்ஜிக்கல் மாஸ்க் ஒரு துணி மாஸ்க் அணிய வேண்டும்.
-> ஒரு மாஸ்க்கை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அணியக்கூடாது. சர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்திய பிறகு டிஸ்போஸ் செய்துவிடவேண்டும் .துணி மாஸ்க் ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்க வேண்டும்.
->முகக் கவசம் அணிவது எவ்வளவு பாதுகாப்போ அதேநேரத்தில் அதனை சரியாக கையாள்வதிலும் நம் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காதுக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd