சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்கு பூஜை சிறப்பு வழிபாடு
இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனூக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணி அளவில் பெண்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் செய்தனர். திருவிளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision