வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த ஆய்வுகூட்டம்

வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த ஆய்வுகூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.சு.மணிவாசன், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார். முன்னிலையில் இன்று (10.05.2024) மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறித்தினார்.

 மேலும், கோடை காலத்தில் ஏற்படும் மின்வெட்டு ஏற்படாமலும் பராமரிப்பு பணிகள் ஏதேனும் மேற்கொள்ளவிருந்தால் முன் கூட்டியே அறிவிப்பு செய்தும் அப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில்களில் வழிபாட்டிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் இன்றி வழிபாடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும், குடிநீர் அவசர மருத்துவ சேவை ஆகியவை கிடைக்கும் வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், கோடை காலத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தேவையான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சமத்துவபுரம் (சீரமைப்பு மற்றும் மீட்டுருவாக்கம்) திட்டப்பணிகள் குறித்தும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், இணைய வழி பட்டா மாறுதல், இணையவழி சான்றிதழ்கள் வழங்குதல் தொடயான பணிகளின் முன்னேற்றும் குறித்தும் புதுமைப் பெண் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் பணிமுன்னேற்றம் குறித்தும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்திட்ட துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நான்முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்தும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாயப்புத்திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்களால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், அரசுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision