திருச்சியில் தீ மிதி குண்டத்தில் விழுந்த பெண் பக்தர்

திருச்சியில் தீ மிதி குண்டத்தில் விழுந்த பெண் பக்தர்

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் சிலோன் காலனி பகுதியில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் எல்லை முனி ஆண்டவர், வழிவிடு பிள்ளையார் ஆலயங்களும் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் தேதி கோ பூஜையும் போலீஸ் காலனியில் அமைந்துள்ள ஞான விநாயகர் கோயில் இருந்து பூத்தட்டு எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற்றது.

4ம் தேதி ஞான விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்து வந்துஅம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருத்தேர் வீதி உலா 5 ஆம் தேதியான இன்று முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் மகா மாரியம்மன் கோவில் முன்பு மூட்டப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதில் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவில் கலந்து கொண்ட அதை பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற 70 வயது மூதாட்டி தீ குண்டத்தில் இறங்கிய பொழுது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO