15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி மாவட்டத்தில்13 ஏரிகளில் மண்ணை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு அரைவட்ட சுற்றுச் சாலை அமைப்பதை நிறுத்தி உயர்மட்ட பாலம் கட்டவும், வயலூர்-சோமரசம்பேட்டை- புத்தூர் வழி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அகண்ட சாலை அமைப்பது, உய்யகொண்டான் கரைகளை அகலமாக்கி போக்குவரத்து சாலை அமைப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தியும் / தொடர் போராட்டங்களில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரியும் தண்ணீர் அருந்தா உண்ணா நிலை போராட்டம் தமிழக முதல்வர் திருச்சி வரும் நாளான 29.12.2022 அன்று நடத்துவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் அய்யா ம.ப.சின்னதுரை அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி போராட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் 28.12.2022 அன்று அவரது இல்லத்திற்கு சென்ற
சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் மேலும் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து வீட்டின் அருகாமையிலேயே பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இப் போராட்டத்தினை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்15 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை உடனடியாக ஆராய்ந்து பணிகளை துரிதமாக செயல்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் நிறைவேற்ற உறுதியளித்த அடிப்படையில் ஐயா ம ப சின்னதுரை அவர்கள் நடத்திய தொடர்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இப் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நல சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அதிகாரிகளிடம் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரி வலியுறுத்தி பேசினர்.
தமிழக விவசாய சங்கம் தலைவர் சின்னதுரை அவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக திருச்சி ரமணா மத்திய மாவட்ட செயலாளர் மக்கள் உரிமை மீட்பு இயக்க நிறுவனர் பசீர் காமராஜ் மாவட்ட தலைவர் மக்கள் சமூக பாதுகாப்பு தலைவர் ஜோசப் தெற்கு மாவட்ட சமக்கள் உரிமை கூட்டணி ஆகியோர் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய....