உலக அல்சைமர் தினம்: அல்சைமர் நோய் என்றால் என்ன..? காரணம் மற்றும் அறிகுறிகள்

உலக அல்சைமர் தினம்: அல்சைமர் நோய் என்றால் என்ன..? காரணம் மற்றும் அறிகுறிகள்

உலகெங்கிலும் 50 மில்லியன் மக்கள் ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இது 2030ல் 82 மில்லியன் ஆகவும் 2050-ல் 182 மில்லியன் ஆக மூன்று மடங்கு உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு புதிய நோயாளி ஞாபகம் மறதியால்அவதிப்படுகின்றனர் அதில் 60 சதவீதத்திலிருந்து 70% மக்கள் அல்ஜிமர்டிமென்ட்ஷியா எனக் கூறப்படும் ஞாபக மறதி நோயால் அவதிப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி அல்ஜிமர் விழிப்புணர்வு தினமாக கருதப்படுகிறது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பாதிக்கும் திறன் கொண்டது அல்ஜிமர் என்பவர் ஒரு மிகப்பெரிய மனநல மற்றும் நோய்குறி மருத்துவர் அவர் நினைவாக இந்த ஞாபகம் மறதி அல்ஜிமர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நோயின் அறிகுறிகள் :

1. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமீப காலமாக ஞாபக சக்தி குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு.

2. சின்ன வேலைகளை கூட மறந்து விடுவார்கள் அவர்களுடைய பொருள்களை கண்ட இடத்தில் வைத்து விட்டு தேடுவார்கள்.

3‌. சின்ன வயதில் பழகிய தெருவாக இருந்தாலும் திரும்பியும் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு சிரமப்படுவார்கள்.

4. நோய் மிகவும் தீவிரமானால் அவர்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் சமையல் அறை கழிப்பறை எங்கு உள்ளது என கண்டறிந்து போவதற்கு சிரமப்படுவார்கள்.

5.அவர்கள் ஆண்களாக இருந்தால் சட்டை பட்டன் மாற்றி போடுதல் பெண்களாக இருந்தால் முந்தானைகள் சரியாக போட முடியாமல் சிரமப்படுவார்கள்.

6.அவர்களே அவர்களின் சுய சுத்தத்தை பராமரிக்க சிரமப்படுவார்கள் விருந்தினர்கள் வந்தால் பேசாமல் அவர்கள் தனியாக இருக்க பழகி விடுவார்கள் இந்த உலகத்தில் இருந்து தனி உலகத்திற்கு போய் விடுவார்கள்.

7. சிறிய விசயங்களுக்கு கூட கோபப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அவர்களால் கோபத்தை கட்டுபடுத்த மிகவும் சிரமப்படுவார்கள்.

8. காலையில் என்ன உணவு சாப்பிட்டோம், நேற்று என்ன நடந்தது. யாரெல்லாம் பார்தோம் என கூற கூட சிரமப்படுவார்கள், அவர்களுக்கு நன்றாக தெரிந்தவரின் பெயரை கூடச்சொல்ல சிரம்ப்படுவார்கள். அவர்கள் சொன்னதையே திரும்ப சொல்வர்கள்.

9. சில சமயம் அவர்களது உறவினர் பெயரை கூட மறந்து விடுவார்கள். 10. வீட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் அவர்களது வீட்டிற்கு வரசிரம்ப்படுவார்கள்.

11, இவர்களுக்கு Recent Memory எனச் சொல்ல கூடிய சமீபகால ஞாபக சக்தி மிகவம் பாதிக்கப்படும். ஆனால் இவர்களுடைய பழைய நினைவுகள் 20-30 வருடங்களுக்கு முன்பு நடந்ததை திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருப்பார்கள். இறந்தவர்களை கூட தற்போது வந்திருக்கிறரர்கள் என்று கூறு கூடிய வாய்ப்புகள் உண்டு. 

அல்ஜிமர் நோய் வர காரணம் என்ன? 

இந்த அல்ஜிமர் நோய் எதனால் ஏற்படுகிறது என்றால் மூளையில் அமிலாய்டு பேலக்ஸ் (AMYLOID PLAQUES)மற்றும் தாவு புரோடின்,(TAU Protein) போன்றவை மூளையில் படிவதால் ஏற்படுகிறது எனக் கண்டறிப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பாரம்பரிய ஜீன்களாக இருக்காலம் எனக் கருதப்படுகிறது.

மேலும் தலையில் காயங்கள் ஏற்ப்பட்டாலும், காற்றுமாசு (Air Po.  மூலம் மூளை மாசுப்படுவதாலும் இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மனிதன் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் குறைவாக இருந்தால் கூட ஞாபக சக்தி குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. மது பழக்கம், உடல் பருமன், புகை பிடித்தல், அதிக ரத்த அழுத்தம் அதிக கொழுப்பு சத்து, சர்க்கரை நோய்,போன்ற நோய்களால் அல்ஜிமர் நோய் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றால்? 

1. தைய்ராய்டு

2. வைட்டமின் பி12

3. எம்.ஆர்.ஐ ஸ்கேன்

4. ஸ்பெக்ட்/பெட்(SPECT/PET)

அல்ஜிம்ர் நோய் வராமல் பாதுகாப்பது எப்படி?

இந்த அல்ஜீமர் நோய் மூளைக்கு சுருக்கம் ஏற்படுவதால் வரக் கூடியது. அதிகமாக படிப்பவர்களுக்கு மூளை சுருக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்நோயிலிருந்த அவர்களை ஆரம்ப நிலையிலெயே கட்டுபடுத்த வேண்டுமென்றால அவர்களுடைய தாய்மொழியை தவிர பிற மொழி ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும். மேலும் சிறிய சிறிய பதில் விளையாட்டு போட்டிகள(puzzle) சீரான உடற்பயிற்சி நடைபயிற்சி செய்தால் இந்நோய்லிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். தியானம் செய்தல் நல்லது"

உணவு வகையில் காபி, சாக்லேட் க்ரின் டீ, செலினியம், காப்பர், இவையாவும் இந்த நோயின் தன்மை அதிகரிக்காமல் பாதுகாத்திடும். வைட்டமின் E, வைட்டமின் C.வைட்டமின் B1 மற்றும் வைட்டமின்B12 இவையாவும் நோயை அதிகரிக்காமல் பாதுகாத்திடும். மெடிட்டரேனியன் (Mediteranean), டாஷ் (Dash) உணவு என்ற இரண்டு உணவு வகைகள் இருக்கிறது. இவை இரண்டும் கலந்த மைன்ட் (MIND) உணவு வகை உகந்ததாகும். மைன்ட் (MIND) உணவு கொழுப்புச்சத்து குறைவாகவும் நல்ல கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும்.

ஞாபகம் தூண்டல் (Remniacent Memory)

இந்நோய் வந்தவர்களுக்கு ஞாபக மறதி இருப்பதனால் அவர்களுக்கு அவர்களின் மூளையை தூண்டக்கூடிய, உதாரணத்திற்கு பழைய காலத்தில் நடந்ததைச் சொல்லி நினைவுப் படுத்தலாம், பழைய ஆல்பம், பழைய ஃபோட்டோ காண்பித்து இவர் யார் யார் என்று கேட்டு அவர்களின் ஞாபகத்தை தூண்டலாம் மேலும் அவர்கள் இசை பிரியராக இருந்தால் அவர்களுக்கு பிடித்த பாடகர் இசையைக் கேட்க செய்யலாம். கட்சியில் இருக்கும் நபர் என்றால் பெருந்தலைவர் பேச்சைபோட்டு அவர்களை கேட்க வைக்கலாம். இவையாவும் அவர்களின் மூளையை தூண்டக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு.இதனால் ஞாபசு மறதி நோய் குறைத்திடலாம்(Medtetaneani{Diach) உணவு என்ற இரண்டு உணவு வகைகள் இருக்கிறது இவை இரண்டும் கலந்த மைன்ட் (Mind) உணவு வகை உகந்ததாகும் கொழுப்புச்சத்து குறைவாகவும் நல்ல கார்போஹைட்ரேட் உள்ள உணவு மேலும் இரத்தக் கொதிப்பு சர்க்கரை வியாதி ஆகியவற்றை சீராக வைத்திடும்.

இளம் வயது ஞாபக மறதி

பொதுவாக இளம் வயதிலேயே சில நபர்களுக்கு ஞாபக மறதி என்று கூறுவார். அது எல்லாம் டிமென்ஷியா (demeiria) ஆகாது அவர்கள் தூக்கமின்மை இருந்தாலும் பல வேலைகள் செய்யக்கூடியவரக இருந்தாலும், அவர்களது மூளை பல வேலைகளைப் பற்றி நினைத்து கொண்டு இருக்கும் போது அடுத்தவர்கள் கூறுவது அவர்களது மூளையில் பதியக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும். அவர்களது ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அவர்களது மறதி இருப்பது போல் தோற்றமளிக்கும் ஆனால் அது ஞாபசு மறதி நோய் ஆகாது. மக்கள் அனைவரும் நல்ல உடற்பயிற்சி, யோகா, தியானம், செய்தால் நமது மூளையை நன்றாக பாதுகாத்திடலாம். ஞாபக மறதி நோய் வராமல் பாதுகாத்திடலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO