வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தலைமை வனப்பாதுகாவலர் ந.சதீஷ்  அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் சீ.கிருத்திகா மற்றும் இரா.சரவணக்குமார் உதவி வனப்பாதுகாவலர் ஆலோசனையின்படி மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் தடுத்தல் மற்றும் வறட்சி தாங்கும் திறன்” என்ற கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு முகாம் வனவியல் விரிவாக்க மையம், எம்.ஆர்.பாளையத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் 150-க்கு மேற்பட்ட மாணவ / மாணவியர்கள் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, சமயபுரம், தன்லெட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர், காந்திகிராம் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கழைக்கழக கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை வனப்பாதுகாவலர், திருச்சி ந.சதீஷ் மரக்கன்றுகள் நடும்விழாவை தொடங்கி வைத்து கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் நடவு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து இரா.சரவணக்குமார் உதவி வனப்பாதுகாவலர், திருச்சி அவர்கள் மாணவ / மாணவியர்களுக்கு நில மறுசீரமைப்பு, தரமான மரக்கன்றுகள் எழுப்புதல், நாற்றங்கால் பராமரிப்பு முறைகள், நடவு செய்யும் முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அனைவராலும் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் வாய்ஸ் அறக்கட்டளை தலைவர் கிரிகோரி, அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்து மாணவ / மாணவியர்களுக்கு எடுத்துரைத்து பின்னர் இதன் ஒரு அங்கமாக விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்களின் உதவியுடன் 100-ற்கும் மேற்பட்ட விதைபந்துகள் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் தூவப்பட்டன. பின்னர் சிறுகனூரில் இரா.சரவணக்குமார் உதவி வனப்பாதுகாவலர், திருச்சி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

 

இதில் கல்லூரி மாணவ / மாணவியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியப்படி பேரணியாக சென்றனர். மேலும் மனிதசங்கிலி ஒருங்கிணைப்பு நடத்தப்பட்டு அனைவரும் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள், திரு.தி.கிருஷ்ணன், திரு.ஜெ.ரவி, வனவர் திரு.எஸ்.விக்னேஷ். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision