சேமிப்பு பத்திரம் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

சேமிப்பு பத்திரம் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்று 19 வயது நிறைவடைந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெறுவதற்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று சமூகநல ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்று 19 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கிப் புத்தகத்தின் நகல், மாற்று சான்றிதழ் (TC), ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2 உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision