மாதம் ரூ.9,250 வரை பென்சன் கிடைக்கும்.. அரசு தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

மாதம் ரூ.9,250 வரை பென்சன் கிடைக்கும்.. அரசு தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 இந்தியாவில் உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெறும் ஓய்வூதியத் திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டத்தை எல்ஐசி நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில் சேர்வதற்கானக் கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.

இன்றைக்கு பென்சன் என்பது அரசு ஊழியர்களுக்கே கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப் பிறகு தங்களின் மாதாந்திரத் தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ள சிறந்த முதலீட்டு திட்டங்கள் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. இதுப் போன்ற மனநிலையில் உள்ள முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கியது. இத்திட்டத்தில் சேர்வதற்கான காலம் கடந்த மார்ச் 31, 2020 என இருந்த நிலையில் தற்போது மார்ச் 31, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் சேர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இதன் நன்மைகள் மற்றும் வட்டி விகிதம் போன்ற அடிப்படை தகவல்கள் குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலோடு பொதுத்துறை வங்கியான எல்ஐசி, பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் நபர்களுக்கு 60 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். எல்ஐசி அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது இணையதள வாயிலாக இத்திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம்.

 குறிப்பாக சந்தாதாரர் தேர்வு செய்யும் ஓய்வூதிய முறையைப் பொறுத்து PMVVY 10 வருட பாலிசி காலத்திற்கான ஓய்வூதியத்தை வழங்குகிறது. 10 வருட பாலிசி காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், பாலிசியின் கொள்முதல் விலை பயனாளிக்கு திருப்பித் தருவது போன்ற பல நன்மைகள் உள்ளது.

 LICPMVVYயின் முதலீடு:

இத்திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம். மேலும் பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் முடிவு செய்யப்படுகிறது.

 குறிப்பாக மாதாந்திர ஓய்வூதியத்திற்கு ரூ. 1.62 லட்சம், காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ. 1.62 லட்சமும், ஆறுமாதங்களுக்கு ரூ. 1.59 லட்சம் மற்றும் ஆண்டுக்கு ரூ. 1.56 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 9250 ஆகும். காலாண்டு 27, 750 அரையாண்டு 55,500 ஓராண்டு ரூபாய்   1,11000  ஆகும்.

ஒரு மூத்த குடிமக்கள் PMVVY திட்டங்களில் சேர்வதற்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. பாலிசி காலத்தின் போது ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை சரண்டர் செய்யக்கூடிய அம்சம் இடம் பெற்றுள்ளது.

PMVVYயின் வட்டி விகிதம் :வருகின்ற மார்ச் 31, 2023 வரை LIC PMVVY ல் சேரும்பாலிதாரர்களுக்கு இந்தத் திட்டத்தின் படி வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.40 சதவீதம் ஆகும். முதிர்ச்சியின் பொழுது எல்ஐசி ஓய்வுதாரருக்கு இறுதி ஓய்வூதிய தவணையுடன் கொள்முதல் விலை பிரீமியத்தை திருப்பி செலுத்தும் மூன்று ஆண்டுகள் பாலிசி முடிந்த பிறகு கடன் வசதி கிடைக்கும் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் கொள்முதல் விலையில் 75 சதவீதமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன் நலன்களுக்காக உள்ள இத்திட்டத்தில் சேர்வதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் உடனே இணைந்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள்..

Source:சுசா

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO