பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் - தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் செயற்குழுவில் முடிவு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் - தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் செயற்குழுவில் முடிவு.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் அச்சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன்,.... எங்களின் பத்து அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் தவிர மற்ற கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அதே நேரத்தில் முக்கிய கோரிக்கைகளான வருவாய் துறை அலுவலர்களுக்கான மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குவது, பேரிடர் மேலாண்மை துறைக்கு நேர்முக உதவியாளர் பணியிடத்தையும், தேர்தல் அலுவலர்களுக்கான நேர்முக உதவியாளர் பணியிடத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய  கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது.

எனவே அந்த கோரிக்கைகளை அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை எங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH