கட்டுக்குள் வராத டீசல் விலை! வேலைநிறுத்தத்தில் லாரி ஓட்டுனர்கள்

கட்டுக்குள் வராத டீசல் விலை! வேலைநிறுத்தத்தில் லாரி ஓட்டுனர்கள்

திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் ஓட்டுநர் நலச்சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.

டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கண்டித்தும், அரசு டீசல் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,சாலை வரியை ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்ய வலியுறுத்தியும்,
கொரோனா வைரஸ் பாதிப்பால் லாரிகள் அதிகளவில் ஓடாத நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், போக்குவரத்து காவல்துறையினர் பொய்யான வழக்குகளை லாரி ஓட்டுனர்கள் மீது பதிவு செய்வதை தடுக்க வேண்டும், பழைய வாகனங்கள் ரத்து செய்வதை கண்டித்தும் திருச்சி மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.