திருச்சி காவலர்களின் மனிதநேயம் -குவியும் பாராட்டுக்கள் 

திருச்சி காவலர்களின் மனிதநேயம் -குவியும் பாராட்டுக்கள் 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருள்மிகு மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நான்காவது நாளாக திருத்தேர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது, திருத்தேரின் முன்பும் பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர், 

அப்போது இரவு 8 மணி அளவில் இரண்டு தேரும் தொட்டியம் கோட்டைமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கன மழை பெய்ய துவங்கியது, கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரும்பாலான மக்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர்,அதில் பெண்மணி ஒருவர் தனது கை குழந்தையுடன் மழையில் நனைந்த படி தத்தளித்ததை பார்த்த

அங்கு பணியில் இருந்த காவலர்கள் தங்களது பாதுகாப்பு கவசத்தை(shield) கொண்டு மழை நிற்கும் வரை மழையில் நனைந்தபடியே அப்பெண்மணியையும் கை குழந்தையையும் மழையிலிருந்து பாதுகாத்தனர்,காவலர்களின் இச்சம்பவத்தை அங்கு எதிரே நின்ற கிராமத்து இளைஞர் வீடியோ மூலம் பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது தொட்டியம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களிடையே வேகமாக பரவி வருகிறது, அதைப் பார்த்த மக்கள் அனைவரும் வலைத்தள பக்கங்களில் காவல்துறையினருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision