திருச்சியில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!

திருச்சியில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!

திருச்சியை பொருத்தவரை நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று 3827 பேருக்கும், திருச்சியில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மருத்துவமனையில் கோவிட் தொற்றால் இன்று ஒரு நாள் மட்டும் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் திருச்சியை சேர்ந்த 5 பேரும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 3 பேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம், கும்பகோணம் ,பெரம்பலூர் பகுதியில் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 பேரும் 55 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.