ரெய்டில் சிக்கிய பணத்தை ஆட்டையை போட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!

valanadu

ரெய்டில் சிக்கிய பணத்தை ஆட்டையை போட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!
image source trichyvision

திருச்சி மணப்பாறை அருகே வளநாடு காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வளநாடு அருகே லாட்டரி சீட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து மணப்பாறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட வளநாடு காவல் சரகத்தில், காவல் துணை கண்காணிப்பாளரின் தனிப்படைகள் மூலம் ரெய்டில் ஈடுபட்டு லாட்டரி விற்னையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தினை வளநாடு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் சுமார் 24 ஆயிரம் ரூபாயை உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் மற்றும் வளநாடு காவல் நிலைய தலைமைக் காவலர் முருகேசன் ஆகிய இருவரும் ஆட்டையை போட்டு உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் டிஐஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில் ஆவணங்களை முறையாக வழக்கு பதிவில் சேர்க்காத இரண்டு பேரையும் வேறு பணிக்கு மாற்ற காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்ரீநிவாசனுக்கு உத்தரவிட்டார். விசாரணை செய்த பிறகு ஆயுதப்படைக்கு மாற்றபட்டனர்.