முசிறியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பாக்கு புகையிலை பறிமுதல்

முசிறியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பாக்கு புகையிலை பறிமுதல்

திருச்சி மாவட்டம். முசிறி   அருகே காமாட்சிபட்டி என்ற கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பாக்கு மற்றும் போதை புகையிலை கடத்தப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து முசிறி  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜி, சக்திவேல், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காமாட்சிபட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து லோடு ஆட்டோவிற்கு சாக்கு மூட்டைகளும், அட்டைப்பெட்டிகளும் மாற்றப்பட்டு கொண்டிருந்தது. அதனை போலீசார் சோதனை செய்த போது 32 மூட்டைகள் மற்றும் இரண்டு அட்டை பெட்டிகளில் 781 கிலோ தடை செய்யபட்ட

போதை பாக்கு, போதை புகையிலை ஆகியவை இருந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றையும் அங்கு போதை பாக்கு, புகையிலை  மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை சேர்ந்த வெள்ளைச்சாமி (33), புதுக்கோட்டை சீனிவாசன் (25), சூரம்பட்டியை சேர்ந்த திவாகர் (23) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும்.

கடத்தி வரப்பட்ட போதை புகையிலை பொருட்கள், உள்ளூர் கடைகளுக்கு வியாபாரம் செய்ய லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்டதா? இதில் தொடர்புடையவர்கள் யார்? போதை புகையிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். உசிரியா இருக்க 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான போதை பொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn