திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 100 அடியில் தேசியக்கொடி கம்பம்!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 100 அடியில் தேசியக்கொடி கம்பம்!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் என்பது தமிழகத்தின் முக்கியமான மற்றும் மையப் பகுதியிலும் தென்னக ரயில்வேயாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு மற்ற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பயணிகளும், வெளிமாநிலங்களுக்கு அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் முக்கியமான ரயில் நிலையங்களில் மத்திய அரசு சார்பில் தேசியக்கொடி கம்பம் அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

Advertisement

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் தேசியக்கொடி நிரந்தரமாக பறந்திட 100 அடி உயர கம்பம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.