2108 மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க விளையாட்டின் முன்னேற்பாடு- அமைச்சர் நேரில் ஆய்வு

2108 மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க விளையாட்டின் முன்னேற்பாடு- அமைச்சர் நேரில் ஆய்வு

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2,108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி நாளை (16.07.2022) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (15.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கி.பிரதீப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருச்சிராப்பள்ளி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (16.07.2022) காலை 8 மணிக்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2108 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி தொடங்குகிறது.

இந்நிகழ்வில் பிரபலமான பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ வாயிலாக, செஸ் விளையாட்டிற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் செஸ்செட் வழங்கப்பட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO