ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் புராஜெக்ட் 10கே திட்ட தொடக்க விழா

ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் புராஜெக்ட் 10கே  திட்ட தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி ஓமேகா சிஎஸ்ஆர் UNNATI மற்றும் hope அறக்கட்டளையுடன் இணைந்து திருச்சியில் பத்தாயிரம் பயனாளிகளை சென்றடையும் நோக்கத்துடன் அதன் தொழில்சார்ந்த முதன்மை திறன் திட்டத்தை  தலைமை விருந்தினரான மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் ‌ இஸ்மத் பானு திருச்சிராப்பள்ளி மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் உதவி இயக்குனர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

ஜூலை 14-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் அரசின் பல்வேறு பங்குதாரர்கள் செயல்பாட்டு பங்குதாரர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திருச்சி உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதல் தலைமுறையாக பணிக்கு வருபவர்களுக்கு நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 120 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மார்ச் 2022-ல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தகுதியான 11 இளைஞர்களைக் கொண்ட பைலட் குழுவுடன் முதன்மைத்திறன் திட்டம் தொடங்கப்பட்டது. இது இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு முன்னணி லாபநோக்கற்ற UNNATI அமைப்பான அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்டது. மையத்தில் பயிற்சி பெற்ற 11 விண்ணப்பதாரர்கள் வெஸ்ட்சைட் மற்றும் குவைஸ் கார்ப் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் வேலைகளை பெற்றுள்ளனர். அந்தப் பகுதிகளில் உள்ள தொழில் துறை தேவைகளின் அடிப்படையில் திறன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கிய துறைகளில் உள்ள திறன் இடைவெளிகளை குறைக்கும் அதே வேளையில் பின்தங்கிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் தலைவர் சுனந்தா ரங்கராஜன் இந்த முயற்சியின் வேலை பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அளிப்பதே ஒமேகா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பத்தாயிரம் பயனாளர்கள் திட்டம் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு தொழில் பயிற்சி மூலம் உதவும் அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதே மையமாக கொண்டு தொழில் தொடர்பான தொழில் நுட்ப திறன்களை வழங்குவதின் மூலம் வேலை வாய்ப்பின்மையை குறைக்கும் என்றார்.

மேலும் பேசிய அவர் எங்களின் பயிற்சி மூலம் தனிநபர்களின் நல்வாழ்வை மட்டுமில்லாமல் இந்த சமூகங்களின் வரும் தலைமுறையினர் நல்வாழ்வை உறுதி செய்யும் என்பதால் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பரிமாற்றம் செய்யக் கூடியவை என்பதை உணர்ந்து பின் தங்கிய சமூகங்களின் நலனுக்காக நாங்கள் எங்கள் வளங்களையும் ஆதரவை விரிவுபடுத்துகிறோம் என தெரிவித்தார் . திருச்சிராப்பள்ளி போன்ற இரண்டு மூன்று அடுக்குகள் கொண்ட நகரங்களில் பயன்படுத்தப்படாத பல திறமையாளர்கள் உள்ளனர்.

அத்தகைய நகரங்களில் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன அதிகப்படியான திறமையாளர்கள் இருந்தும் உள்ளூர் மாவட்டத்திலுள்ள செழித்து வளரும் தொழில்களுக்கு பங்களிக்க முடியாமல் உள்ளனர் அடுத்த சில ஆண்டுகளில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையை தொழில்துறை சுட்டிக்காட்டினாலும் இது உண்மையான பற்றாக்குறையை விட உண்மையற்ற பணியாளர் இருப்பை காட்டுகிறது. பிராஜக்ட் 10 கே மூலம் இந்த பணியாளர்களின் முன்னணியில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. நாளைய நல்ல நாளுக்காக இளைஞர்கள் அடித்தளம் ஆவர்.

இத்தகைய பயிற்சிகளின் தாக்கம் சமூகங்களின் மூலம் நேரடி பயனாளிகளின் மட்டுமல்லாமல் நாட்டின் உற்பத்தி திறன் மற்றும் அதன் பொருளாதாரத்தின் மூலமாகவும் உணரப்படும் முதன்மை திட்டத்திலிருந்து இதுவரை 150 இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் 120 பேர் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் அடுத்த மூன்று மாதங்களில் 120 பேர் பட்டம் பெற்று பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று ஒமேகா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கண்ணன் சுகந்த ராமன் கூறினார்.

தொடக்க நிகழ்வில் திருச்சிராப்பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பின் பல்வேறு பங்குதாரர்கள் கலந்துகொண்டனர் ஒமேகா சிஎஸ்ஆர் தலைவர் சுனந்தா ரங்கராஜன் ஒமேகா ஹெல்த்கேர் தலைமை நிதி அதிகாரி கண்ணன் சுகந்த ராமன் வள மேலாண்மை மற்றும் மூலோபாய திட்டமிடலின் மூத்த துணைத் தலைவர் நாராயணன் மற்றும் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர் மற்றும் உலகளாவிய விநியோக தலைவர் எஸ் சத்யநாராயணா என ஒமேகாவைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அயன் கொரியா சுவாமி குழும நிறுவனங்கள் குழும நிறுவனங்களின் சிஓஓ ரமேஷ் சுவாமி மற்றும் சத்வா கன்சல்டிங் அசோசியேட் பிரன்சிபலா ஆப்ரஹாம் ஆகியோர் அடங்கிய அமலாக்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி செயல்படும் முறை எதிர்பார்க்கப்படும் முடிவுகள் மற்றும் சில பயனாளிகளின் வெற்றியை கதையை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது.

பயனாளிகளை கதைகளில் பர்வின் என்ற பெண் தனது குடும்பத்தை ஆதரிக்க முடியாமல் இருந்து இப்போது பயிற்சியின் மூலம் தன்னை பொருளாதார ரீதியாக கவனித்து சுதந்திரமாக இருப்பதாக தெரிவித்தார். பவானி என்பவர தனது பயிற்சியின் மூலம் ஒரு தபால் அலுவலகத்தில் அரசாங்க வேலையை பெற முடிந்தது என நிகழ்வில் தனது வெற்றிக் கதையை பகிர்ந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO