திருச்சி மாநகரில் செல்போன் பறித்த நபர்களை மடக்கி பிடித்து 4 செல்போன்கள் மீட்பு

திருச்சி மாநகரில் செல்போன் பறித்த நபர்களை மடக்கி பிடித்து 4 செல்போன்கள் மீட்பு

கடந்த 20.08.22-ந்தேதி, இரவு 23.30மணிக்கு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த் (19) என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்று, மேற்படி செல்போன் பறிப்பு சம்பவ நடைபெற்ற சில நிமிடங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், உடனடியாக வான்செய்தி வழியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க இரவு பணியிலிருந்த காவல் அதிகாரிகள், ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ரோந்து வாகனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவையடுத்து திருச்சி மாநகரத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்தும், மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மூன்று நபர்களும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முற்படும் போது, அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமைக்காவலர்கள் டேவிட்சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ் ஆகியோர்கள் செல்போன் கொள்ளையர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிபிடித்து கைது செய்தார்கள்.

மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தி இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்த மேலும் 3 செல்போன்கள் உட்பட (மொத்தம் 4 செல்போன்கள்) பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் 1) விக்னேஸ்வரன் (23), 2) அஜெய்ராஜ் (22) ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு, கைது செய்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், வெகுமாக பாராட்டி, மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக பணிநற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO