திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு 4ம் மாத மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு 4ம் மாத மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து *அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்* கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக

நான்காம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் நேற்று 10/3/2025 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது.முகாமில் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் உறவினர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision