திருச்சியில் கொரோனா தடுப்பிற்காக இன்று மட்டும் 5 இலட்சம் நிவாரணம்!!

திருச்சியில் கொரோனா தடுப்பிற்காக இன்று மட்டும் 5 இலட்சம் நிவாரணம்!!

திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண நிதிக்கு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் மருத்துவ சேவை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாக்க அந்தேரி டிரஸ்ட் இன் இந்தியாவின் சார்பாக நிதி நிர்வாக அறங்காவலர் எஸ்‌.முத்துமாலா தேவி 3 லட்சம் மதிப்பிலான முக கவசம், N-95 முககவசம்,PPE பாதுகாப்பு ஆடை, கை கழுவும் திரவம் ஆகியவையும்,

தஞ்சாவூர் சேவாலயா அறங்காவலர் மகேஸ்வரன், தன்னார்வலர் ரேவதி மகேஸ்வரன் ஆகியோர் ஒரு லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு கவச உடைகள் 100 எண்ணிக்கையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவிடம் இன்று வழங்கப்பட்டது.

மேலும், முதல் அமைச்சர் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பொது நிவாரண நிதிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் அருள்ஜோஸ், செயலாளர் ஆர்தர் காட்வின், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசுவிடம் இன்று வழங்கினார்கள்.